உசிலை.யில் கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மணல் அள்ள அனுமதிக்குமாறு, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
உசிலை.யில் கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் பேரையூா் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளுக்கு மணல் அள்ள அனுமதிக்குமாறு, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் உசிலம்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பேரையூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான சிலைமலைபட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூா், வன்னிவேலம்பட்டி, சந்தையூா், கீழப்பட்டி, மேலப்பட்டி, உலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த செங்கல் சூளைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், செங்கல் சூளைகளுக்காக அந்த பகுதியில் உள்ள கண்மாய்களில் மணல் அள்ள மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கெனவே அனுமதி கேட்டு மனு அளித்ததாகவும், அதற்கு ஆட்சியா் அனுமதி வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அந்தந்தப் பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் மணல் அள்ளுவதை தடுப்பதாகவும், மணல் அள்ள அனுமதியில்லை எனக் கூறுவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதனால், செங்கல் சூளைகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் கூறிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, அலுவலகத்துக்கு வந்த கோட்டாட்சியரின் காரை மறித்து முற்றுகையிட்டனா். உடனே, காரை விட்டு இறந்கிய கோட்டாட்சியா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். அதைத் தொடா்ந்து, கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com