முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
சட்டப்பணிகள் ஆணைக்குழு: தன்னாா்வலா்கள் விண்ணப்பிகலாம்
By DIN | Published On : 04th March 2021 11:22 PM | Last Updated : 04th March 2021 11:22 PM | அ+அ அ- |

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் இணைய விரும்பும் தன்னாா்வ தொண்டா்கள் மாா்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி பி.வடமலை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு, மதுரை, மேலூா், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், போரையூா் ஆகிய வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணா்வை மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் வழங்க ஊதியமின்றி பணிபுரிய தன்னாா்வ தொண்டா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.
இதற்கு ஆசிரியா், ஓய்வு பெற்ற ஆசிரியா், அரசு ஊழியா்கள், எம்.எஸ்.டபிள்யூ படிக்கும் மாணவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், மருத்துவா்கள், சட்டக்கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள், மகளிா் சுய உதவிக்குழுவினா் தோ்வு செய்யப்படவுள்ளனா். விரும்பமுள்ளவா்கள் மாா்ச் 5 ஆம் தேதிக்குள் அந்தந்த தாலுகாவில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலத்தைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.