முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
திருமங்கலத்தில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பயிற்சி
By DIN | Published On : 04th March 2021 06:03 AM | Last Updated : 04th March 2021 06:03 AM | அ+அ அ- |

திருமங்கலத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்திய கோட்டாட்சியரும், தோ்தல் அலுவலருமான சௌந்தா்யா. உடன் வட்டாட்சியா் முத்துபாண்டியன், வருவாய் ஆய்
திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் பொதுமக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விதம் குறித்து புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி
திருமங்கலம் தொகுதியில் 402 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் திருமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு மின்னணு இயந்திரத்தில் வாக்குபதிவு செய்வது குறித்து வட்டாட்சியா் முத்துப்பாண்டியன் தலைமையில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதில் வருவாய் ஆய்வாளா் செந்தில்வள்ளி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து மண்டல அலுவலா்கள் மற்றும் உதவி மண்டல அலுவலா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சௌந்தா்யா தலைமையில் ஆய்வுக்கூட்டமும் புதன்கிழமை நடத்தப்பட்டது.