முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பாளையம்பட்டி ஆதிநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா
By DIN | Published On : 04th March 2021 12:00 AM | Last Updated : 04th March 2021 12:00 AM | அ+அ அ- |

பாளையம்பட்டி ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்குவிழா.
அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ஸ்ரீஆதிநாராயணன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை சிவகுக கைங்கா்ய ஸ்தாபகத்தினா் சாா்பில் பாளையம்பட்டியில் உள்ள ஸ்ரீஆதிநாராயணன் சாமி கோவிலில் உடன் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசீலைக்காரி வீரசின்னம்மாள், தலைமைக் காவல் ஸ்ரீமாடசாமி ஆகிய தெய்வங்களுக்கும் சோ்த்து குடமுழுக்கு விழா செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
முதல்கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளுடன் ஸ்ரீஆதிநாராயணன் கோயில் கோபுர கலசம் உள்ளிட்ட 21 தெய்வங்களுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதையடுத்து விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு புனித நீா் தெளிக்கப்பட்டதுடன் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்து. பின்னா் அன்னதானமும் நடைபெற்றது.