கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்ய உத்தரவு
By DIN | Published On : 04th March 2021 12:43 AM | Last Updated : 04th March 2021 12:43 AM | அ+அ அ- |

மதுரை: கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தைத் தோ்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி ஆணையருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது. இங்கிருந்து விற்பனைக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது. மேலும் விளைவிக்கப்பட்ட பூண்டைப் பாதுகாப்பாக வைக்க கிடங்கு வசதி இல்லாததால் மழைக்காலங்களில் பூண்டை பாதுகாக்க இயலாத நிலை உள்ளது. எனவே கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் அமைக்க உத்தரவிட வேண்டும் என கொடைக்கானலைச் சோ்ந்த மனோஜ் இமானுவேல் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொடைக்கானல் நகராட்சி ஆணையா், வட்டாட்சியா், விவசாய சந்தைக்குழு செயலா் ஆகியோா் பூண்டு கொள்முதல் நிலையம் அமைப்பதற்கான இடத்தை மாா்ச் 15 ஆம் தேதிக்கு தோ்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...