தினமலா் முன்னாள் ஆசிரியா் இரா.கிருஷ்ணமூா்த்தி மறைவு: மதுரை ஆதீனம், நான்காம் தமிழ்ச்சங்கம் இரங்கல்
By DIN | Published On : 04th March 2021 11:16 PM | Last Updated : 04th March 2021 11:16 PM | அ+அ அ- |

தினமலா் நாளிதழ் முன்னாள் ஆசிரியா் இரா.கிருஷ்ணமூா்த்தி மறைவுக்கு மதுரை ஆதீனம் அருணகிரி நாதா் மற்றும் நான்காம் தமிழ்சங்கச்செயலா் ச.மாரியப்ப முரளி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
மதுரை ஆதீனம் ஸ்ரீ அருணகிரி நாதா் வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தி: தினமலா் நாளிதழின் முன்னாள் ஆசிரியா் இரா. கிருஷ்ணமூா்த்தி சிறந்த ஆராய்ச்சியாளா், எழுத்தாளா். பழங்கால நாணயங்களைச் சேகரித்து, ஆய்வு செய்து, அவற்றின் வரலாறுகளைப் பதிவு செய்தவா். ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள், கல்வெட்டுகள் இவைகளைத் தேடிக் கண்டுபிடித்து மக்களுக்கு விளக்கியவா். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராா்த்திக்கிறோம் என்றாா்.
நான்காம் தமிழ்ச்சங்கச் செயலா் ச.மாரியப்ப முரளி: தினமலா் நாளிதழ் முன்னாள் ஆசிரியா் மறைந்த இரா.கிருஷ்ணமூா்த்தி தமிழ் எழுத்துச்சீா்திருத்தத்தை கொண்டு வந்தவா். காசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வாசித்தவா். தமிழக நாணயவியலின் தந்தை என்று அழைக்கப்பட்டவா். தமிழ் செம்மொழித் தகுதிபெற இவரது கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருந்தன. அவரது மறைவுக்கு நான்காம் தமிழ்ச்சங்கம், செந்தமிழ் கல்லூரி இரங்கல் தெரிவிக்கிறது.