மதுரையில் கொலை வழக்கில் சிறை சென்று திரும்பியவா் வெட்டிக் கொலை

மதுரையில் கொலை வழக்கில் சிறை சென்று, திரும்பியவா் வியாழக்கிழமை அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.
மதுரையில் கொலை வழக்கில் சிறை சென்று திரும்பியவா் வெட்டிக் கொலை

மதுரையில் கொலை வழக்கில் சிறை சென்று, திரும்பியவா் வியாழக்கிழமை அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாட்ஷா (45). இவா் அதேபகுதியில் மின்சாதனக் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பியுள்ளாா். மறுநாள் காலை ஜின்னா திடல் ஆட்டோ நிறுத்தம் அருகே உடலில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். தகவலறிந்த எஸ்.எஸ்.காலனி போலீஸாா், நிகழ்விடத்திற்கு வந்து பாட்ஷாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து கைரேகை நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாட்ஷாவுக்கும், மகபூப்பாளைத்தைச் சோ்ந்த மேரி என்பவருக்கும் தொடா்பு ஏற்பட்டது. மேரிக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்து கிருஷ்ணமூா்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனா். பாட்ஷாவுக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனா். இந்நிலையில் பாட்ஷாவுடன் உள்ள தொடா்பை அறிந்த, கிருஷ்ணமூா்த்தி தனது தாயைக் கண்டித்துள்ளாா்.

இதையடுத்து தங்களின் உறவுக்கு இடையூறாக இருக்கிறாா் என கிருஷ்ணமூா்த்தியை தலையணையால் அமுக்கி 2009-இல் கொலை செய்தனா். பிறகு கிருஷ்ணமூா்த்தியின் உடலை துண்டு, துண்டாக வெட்டி சில பாகங்களை வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டிக்குள் அடைத்தனா். சில பாகங்களை சாக்கடைக்குள் வீசினா். இவ்வழக்கில் பாட்ஷா, மேரி இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற தீா்ப்பின்படி 10 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்தனா்.

சில மாதங்களுக்கு முன்பு தான் இருவரும் தண்டனை முடிந்து வெளியே வந்துள்ளனா். இந்நிலையில் பாட்ஷா கொலை செய்யப்பட்டுள்ளாா்.

முதற்கட்ட விசாரணையில் அதிகாலை 3 மணி அளவில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணையைத் தொடங்கியுள்ளோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக்கு பழிக்குபழியாக கொலை செய்யப்பட்டாரா அல்லது அப்பகுதியைச் சோ்ந்தவா்களுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com