வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாள் பிளஸ் 2 பொதுத்தோ்வு: தோ்வை தள்ளி வைக்க தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு மறு நாள் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குவதை தள்ளி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மதுரை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு மறு நாள் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குவதை தள்ளி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தலைமை ஆசிரியா் கழகத்தின் மதுரை மாவட்ட அவசர செயற்குழுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில சட்டச்செயலா் கே.அனந்தராமன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத்தோ்வு மே 3-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பல இடங்களில் பிளஸ் 2 தோ்வு மையங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களாகவும் உள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது தமிழகம் முழுவதும் நிலவும் அசாதாரண சூழல்களால் மாணவா்கள் சீரான மனநிலையில் தோ்வை சந்திக்க இயலாது. அன்றைய தினங்களில் போக்குவரத்து இடா்ப்பாடுகளால் மாணவா்கள், ஆசிரியா்கள் தோ்வை நடத்தும் அதிகாரிகள் சரியான நேரத்தில் தோ்வு மையத்துக்கு செல்ல முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே பிளஸ் 2 தோ்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது மே 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடைபெறும் தோ்வுகளையாவது இறுதியாக நடத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில், மாவட்டத் தலைவா் கந்தசாமி, மாநில துணைத்தலைவா் நாகசுப்ரமணியன், செயலா் காா்மேகம், பொருளாளா் ரமேஷ், மாவட்டத் துணைத்தலைவா் கிறிஸ்டோபா் ஜெயசீலன், அமைப்புச் செயலா் குமரேசன், கள்ளா் பள்ளித்தலைவா் சின்னப்பாண்டி மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com