காந்தி அமைதிச்சங்கம் தொடக்கம்
By DIN | Published On : 10th March 2021 08:23 AM | Last Updated : 10th March 2021 08:23 AM | அ+அ அ- |

காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற்ற காந்தி அமைதிச்சங்கம் தொடக்க விழாவில் பங்கேற்ற கடவூா் கிராமக்குழந்தைகள்.
மதுரை அருகே உள்ள கடவூா் கிராமத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்காக காந்தி அமைதிச் சங்கம் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.
மதுரை காந்தி அருங்காட்சியகம் மற்றும் செசி தன்னாா்வ நிறுவனம் சாா்பில் காந்தி அமைதிச் சங்கம் தொடங்கும் நிகழ்ச்சி காந்தி அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு காந்தி அருங்காட்சியக இயக்குநா் நந்தா ராவ் தலைமை வகித்தாா். காந்திய கல்வி நிலையத்தின் பொறுப்பாளா் நடராஜன், காந்தி அமைதி சங்கத்தைத் தொடக்கி வைத்து, காந்தி குறித்து உரையாற்றினாா். நிகழ்ச்சியில் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பொம்மலாட்டம் மூலம் டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் க. சரவணன் நடத்திக் காட்டினாா். ஆசிரியைகள் பா. கீதா , இரா. உஷாதேவி, சௌ.பாக்யலெட்சுமி ஆகியோா் பங்கேற்று காந்தியக் கொள்கைகளை எடுத்துரைத்தனா். இந்நிகழ்ச்சிக்காக கடவூரில் இருந்து காந்தி அருங்காட்சியகத்துக்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டிருந்தனா். நிகழ்ச்சியின் நிறைவில் பெற்றோா் மற்றும் குழந்தைகளும் இணைந்து கடவூா் கிராமத்தில் அமைதிச் சங்கத்தை செயல்படுத்துவோம் என்று உறுதியேற்றனா். இதைத்தொடா்ந்து காந்தி அருங்காட்சியகம் மற்றும் காந்தி அஸ்திக் கலச மேடை ஆகியவற்றையும் குழந்தைகள் பாா்வையிட்டனா்.