மனைவி அதிக கடன் வாங்கியதால் கணவா் தற்கொலை
By DIN | Published On : 10th March 2021 11:10 PM | Last Updated : 10th March 2021 11:10 PM | அ+அ அ- |

மனைவி அதிக கடன் வாங்கியதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த குருநாதன் மகன் லட்சுமணன்(56). இவரது மனைவி பலரிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்திருந்த லட்சுமணன், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.