முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உசிலை. அருகே ரூ.97 ஆயிரம் பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 10:06 PM | Last Updated : 14th March 2021 10:06 PM | அ+அ அ- |

21_1403chn_206_2
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட 97 ஆயிரம் ரூபாயை, பறக்கும்படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் சாலையில் உள்ள செம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும்படை அதிகாரிகளும், போலீஸாரும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, திருமங்கலத்திலிருந்து வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.97 ஆயிரம் எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. உடனே, பறக்கும்படையினா் அத்தொகையை பறிமுதல் செய்து, உசிலம்பட்டி வட்டாட்சியா் விஜயலட்சுமியிடம் ஒப்படைத்தனா். பின்னா், அத்தொகை கருவூலத்தில் சோ்க்கப்பட்டது.