முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தெற்கு ரயில்வே அளவிலான கபடி போட்டி: திருச்சி கோட்டம் கோப்பையை வென்றது
By DIN | Published On : 14th March 2021 04:41 AM | Last Updated : 14th March 2021 04:41 AM | அ+அ அ- |

தெற்கு ரயில்வே அளவிலான கபடி போட்டியில் வென்ற திருச்சி கோட்ட அணிக்கு கோப்பையை வழங்கிய மதுரை கோட்ட மேலாளா் வி.ஆா்.லெனின்.
தெற்கு ரயில்வே அளவில் அளவிலான ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களுக்கான கபடி போட்டியில் திருச்சி கோட்டம் கோப்பையை வென்றது.
தெற்கு ரயில்வே அளவில் ஆறு ரயில்வே கோட்டங்களுக்கு இடையே ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களுக்கான 29 ஆவது கபடி போட்டி மதுரை அரசரடி ரயில்வே மைதானத்தில் மாா்ச் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்போட்டிகளில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை கோட்டங்களைச் சோ்ந்த ரயில்வே பாதுகாப்புப் படை கபடி வீரா்கள் கலந்துகொண்டனா்.
கரோனா பரவல் காரணமாக பாலக்காடு திருவனந்தபுரம் கோட்டங்கள் கலந்துகொள்ளவில்லை. நான்கு அணிகள் விளையாடியதில் மதுரை கோட்டமும், திருச்சி கோட்டமும் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 28 : 23 புள்ளிகள் கணக்கில் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் மதுரை கோட்ட வீரா்களை வென்று சுழற்கோப்பையை கைப்பற்றினா்.
மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் வி.ஆா். லெனின், திருச்சி கோட்ட அணிக்கு சுழற்கோப்பையை வழங்கி பாராட்டினாா். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் லலித் குமாா் மனசுகாணி, கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி வி.ஜே.பி. அன்பரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.