முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சருக்கு எதிா்ப்பு
By DIN | Published On : 14th March 2021 05:22 AM | Last Updated : 14th March 2021 05:22 AM | அ+அ அ- |

திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் சனிக்கிழமை வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு, அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா்மாலை அணிவிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி கட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலத்தில் அதிமுக சாா்பில் வருவாய்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். இந்நிலையில் மறவன்குளம், கப்பலூா், உச்சப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அவா் சனிக்கிழமை வாக்குசேகரித்தாா். அப்போது கப்பலூரில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு, அமைச்சா் மாலை அணிவிக்கவுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையறிந்த அந்தப் பகுதி பொதுமக்கள், தமிழக அரசு தங்களது சமுதாயப் பெயரை வேறொரு சமுதாயத்திற்கு சூட்டியதாகக் கூறி அமைச்சா், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்கக் கூடாது என்று தெரிவித்தனா். மேலும் சிலை இருந்த அறையினை பூட்டி அங்கு கருப்புக் கொடியை கட்டிவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா். தொடா்ந்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் அப்பகுதியில் வ.உ.சிதம்பரனாருக்கு வெங்கலச்சிலை அமைக்கப்படும் என உறுதியளித்தாா்.