உசிலம்பட்டியில் அமமுக வேட்பாளா் ஐ.மகேந்திரன் பிரசாரம் தொடக்கம்
By DIN | Published On : 14th March 2021 04:38 AM | Last Updated : 14th March 2021 04:38 AM | அ+அ அ- |

உசிலம்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவா் மற்றும் மூக்கையாத் தேவா் சிலைகளுக்கு சனிக்கிழமை மாலை அணிவித்த அமமுக வேட்பாளா் ஐ.மகேந்திரன்.
உசிலம்பட்டி சட்டப் பேரவைத் தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஐ.மகேந்திரன் தோ்தல் பிரசாரத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.
முன்னதாக வாலாந்தூரில் உள்ள குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோயிலில் அவா் வழிபட்டாா். பின்னா், வாலாந்தூா், குப்பணம்பட்டி, சேம்பா் ஆகிய பகுதிகளில் அவா் வாக்குசேகரித்தாா். அங்கிருந்து உசிலம்பட்டிக்கு சென்ற ஐ.மகேந்திரன், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் மற்றும் மூக்கையாத் தேவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொது மக்களிடம் வாக்குசேகரித்தாா்.
அப்போது, அமமுக நகரச் செயலாளா் குணசேகர பாண்டியன், சேடபட்டி வடக்கு ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் கே.பி.கே.வீர பிரபாகரன், உசிலம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் மலேசியா பாண்டியன், வடக்கு ஒன்றியம் அபிமன்னன், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளா் சௌந்திரபாண்டியன், சிந்துபட்டி ஊராட்சித் தலைவா் ஈச்சம்பட்டி ஜெயராமன் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.