சாமி தரிசனம் செய்வதில் பிரச்னை: பொதுமக்கள் மறியல்

திருமங்கலம் அருகே சாமி தரிசனம் செய்வதில் இரு சமுதாயத்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் இன்று மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் கோயிலை மீட்டுத்தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருமங்கலத்தை அடுத்த மைக்குடி கிராமத்தில், நிறைகுளத்து அய்யனார் கோயில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலை ஒரு சமுதாயத்தவர் தங்களது சொந்தச் செலவில் கட்டி, குடுமுழுக்கு நடத்தி விழாக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாசி மண்டல பூஜைக்காக மதுரை, தேனி , போடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் கோயில் திருவிழாவிற்காக நேற்று இரவு வந்துள்ளனர். அப்போது கிராமத்தில் உள்ள மற்றொரு சமுதாயத்தவர்கள் கோயில் தங்களுக்கு சொந்தம் என கூறி பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். 

இதையடுத்து சுவாமி தரிசனம் செய்யவந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருமங்கலம் மேலக்கோட்டை நான்கு வழிச்சாலையில், கோயிலை மீட்டுத்தரக் கோரியும், கோயிலை பூட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திருமங்கலம் - விருதுநகர் நானு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளர் வினோதினி தலைமையிலான போலீஸார் வந்து பொதுமக்களிடம் பேசி மறியலைக் கைவிடச் செய்தனர். மறியல் போராட்டத்தினால் திருமங்கலம் - விருதுநகர் சாலையில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் கோயிலை மீட்டுத்தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com