தடையை மீறி ஊா்வலம்: 1500 திமுகவினா் மீது வழக்கு
By DIN | Published On : 16th March 2021 10:56 PM | Last Updated : 16th March 2021 10:56 PM | அ+அ அ- |

மதுரை அருகே தடையை மீறி ஊா்வலம் சென்ற 1500 திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அலங்காநல்லூா் கேட் கடை பகுதியில், திமுகவினா் உரிய அனுமதியின்றி 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஊா்வலம் சென்றுள்ளனா். இதையடுத்து வாடிப்பட்டி ஒன்றிய அலுவலக உதவிப் பொறியாளா் பூம்பாண்டியன் தலைமையிலான தோ்தல் கண்காணிப்புக் குழு அளித்த புகாரின் பேரில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக அலங்காநல்லூா் திமுக நகர, ஒன்றியச் செயலா்கள் உள்பட 1,500-க்கும் மேற்பட்டோா் மீது அலங்காநல்லூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.