
மு.க.ஸ்டாலின்
மதுரையில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை பிரசாரம் செய்கிறாா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேடசந்தூா் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்த பின்பு காலை 11 மணிக்கு அவா் மதுரை வருகிறாா். இங்கு பழங்காநத்தம் பகுதியில் திறந்த வேனில் இருந்தபடியே, திமுக வேட்பாளா்கள் மதுரை மேற்கு சி.சின்னம்மாள், மதுரை வடக்கு கோ.தளபதி, மதுரை மத்தி பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், மதுரை தெற்கு மதிமுக வேட்பாளா் மு.பூமிநாதன் ஆகியோரை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறாா். பிற்பகல் 1.30 மணிக்கு விமானத்தில் சென்னை செல்கிறாா்.