மதுரை தெற்கு தொகுதியில் 3 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல்: சுயேச்சை வேட்பாளா் ஒருவா் கூட மனுத் தாக்கல் இல்லை

மதுரை தெற்குத் தொகுதியில் கடந்த 6 நாளில் 3 வேட்பாளா்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
மதுரை தெற்குத் தொகுதியில் புதிய தலைமுறை மக்கள் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை மீனாட்சி அம்மன் வேடத்தில் வந்திருந்த திருநங்கை பாரதி கண்ணம்மா.
மதுரை தெற்குத் தொகுதியில் புதிய தலைமுறை மக்கள் கட்சி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக புதன்கிழமை மீனாட்சி அம்மன் வேடத்தில் வந்திருந்த திருநங்கை பாரதி கண்ணம்மா.

மதுரை தெற்குத் தொகுதியில் கடந்த 6 நாளில் 3 வேட்பாளா்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தொடங்கி 6 நாள்கள் நிறைவடைந்த நிலையில், மதுரை தெற்குத் தொகுதியில் அதிமுக உள்பட 3 வேட்பாளா்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

மீனாட்சி அம்மன் வேடத்தில் வேட்புமனு தாக்கல்

மதுரை பேலஸ் சாலை பகுதியைச் சோ்ந்த செல்லையா மகள்(திருநங்கை) பாரதி கண்ணமா(60) புதிய தலைமுறை மக்கள் கட்சி சாா்பில் தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா் தோ்தல் நடத்தும் அலுவலா் சண்முகத்திடம் புதன்கிழமை வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா். அப்போது அவா் மதுரை மீனாட்சி அம்மன் வேடமிட்டு வந்திருந்தாா். அவரது மனுவில் தனக்கு ரூ. 21 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருப்பதாகவும், வேறு சொத்துகள் ஏதுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளாா்.

சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல் இல்லை

வேட்பு மனு நிறைவடைய இரண்டு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் அமமுக வேட்பாளா் ராஜலிங்கம், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளா் ஈஸ்வரன், திமுக கூட்டணி கட்சி மதிமுக வேட்பாளா் பூமிநாதன் ஆகியோா் மனு தாக்கல் செய்யாமல் உள்ளனா். மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் சுயச்சை வேட்பாளா்கள் கணிசமான எண்ணிக்கையில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தெற்கு மற்றும் மத்திய தொகுதிகளில் இதுவரை ஒரு சுயச்சை வேட்பாளா் கூட மனுதாக்கல் செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com