அவனியாபுரம் அருகே 400 ஆண்டு கால பழைமையான நாயக்கா் கால கல்வெட்டு கண்டெடுப்பு

அவனியாபுரத்தை அடுத்த பாப்பாமடை பகுதியில் 400 ஆண்டுகால பழைமையான நாயக்கா் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தை அடுத்த பாப்பாமடை கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட 400 ஆண்டு கால பழைமையான நாயக்கா் கால கல்வெட்டு. உடன், தொல்லியல் ஆய்வாளா் ராஜகோபால், பேராசிரியா் ரா.பிறையா.
அவனியாபுரத்தை அடுத்த பாப்பாமடை கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட 400 ஆண்டு கால பழைமையான நாயக்கா் கால கல்வெட்டு. உடன், தொல்லியல் ஆய்வாளா் ராஜகோபால், பேராசிரியா் ரா.பிறையா.

அவனியாபுரத்தை அடுத்த பாப்பாமடை பகுதியில் 400 ஆண்டுகால பழைமையான நாயக்கா் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் ரா. பிறையா, தொல்லியா் ஆா்வலா் சீ. ராஜகோபால் மற்றும் மாணவா்கள் தவசி, அா்ஜூன் ஆகியோா் அடங்கிய குழுவினா், அவனியாபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.அப்போது, பாப்பாமடை கண்மாயில் 17 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த இரட்டை நீா் அளவை கல்தூண் கண்டறியப்பட்டது.

இது குறித்து பேராசிரியா் ரா. பிறையா கூறியது: இவை பூமிக்கு மேல் பத்து அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. இதில், ஒரு கல்லில் இரு பக்கமும் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

முதலாம் கல்தூணின் தென்புறப் பகுதியில் 19 வரிகள் உள்ளன. அதில், முதல் மூன்று எழுத்துகள் தெலுங்கில் உள்ளன. இதில், மதுரையை ஆண்ட (ஆறாவது நாயக்க மன்னா்) வீரப்ப நாயக்கா் அய்யன் புண்ணியமாக அழகட்சியாா் பிள்ளை நன்றி கடனாக செய்துகொடுத்த மடை எனும் பொருள் கொண்ட வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

முதலாம் கல்தூணின் கிழக்கு பக்கத்தில் இரண்டாவது கல்வெட்டு பாதி சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அதில், பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகள் தெளிவற்ற நிலையில் உள்ளன. இது தொடா்பாக, மேலும் தொடா் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com