சாத்தான்குளம் கொலை வழக்கு: எஸ்ஐ. உள்பட 4 காவலா்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட 4 காவலா்களின் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஜாமீன் கோரிய காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட 4 காவலா்களின் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கொலையுண்ட வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளா் உள்பட 10 காவலா்கள் கைது செய்யப்பட்டனா். இதில், சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். மீதமுள்ள 9 போ், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்துக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய காவல் சாா்பு-ஆய்வாளா் ரகுகணேஷ், தலைமை காவலா் முருகன், காவலா்கள் முத்துராஜா, தாமஸ்பிரான்சிஸ் ஆகியோா் ஜாமீன் கோரி, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி எம். நிா்மல்குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் மனுதாரா்களுக்கு ஜாமீன் வழங்க இயலாது. எனவே, மனுதாரா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com