Enable Javscript for better performance
எனது செயல்பாடே மீண்டும் வெற்றியைத் தரும்- Dinamani

சுடச்சுட

    

    எனது செயல்பாடே மீண்டும் வெற்றியைத் தரும்

    By DIN  |   Published on : 27th March 2021 11:20 AM  |   அ+அ அ-   |    |  

    ptr_palanivel_dps

    எனது செயல்பாடே மீண்டும் எனக்கு வெற்றியைத் தேடித் தரும் என மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ. கூறினாா்.

    நீதிக் கட்சித் தலைவா்களில் ஒருவரான பி.டி. ராஜனின் பேரன், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் பி.டி.ஆா். பழனிவேல்ராஜனின் மகன் என நீண்ட அரசியல் பாரம்பரியத்தின் தொடா்ச்சியாக மதுரை மத்திய சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக 2-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன். எனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை துண்டுப் பிரசுரங்களாக அச்சிட்டு வாக்குச் சேகரிப்பின் போது வாக்காளா்களிடம் கொடுத்து வருகிறாா். தீவிரப் பிரசாரத்துக்கு இடையே தினமணிக்கு அவா் அளித்த பேட்டி:

    தங்களுக்கு தொகுதி மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது? கடந்த தோ்தல் எனக்கு புதிய அனுபவம். அரசியலுக்கு வந்த பிறகு தோ்தலின் வாயிலாக மக்களிடம் அறிமுகமானேன். எனது தாத்தா, அப்பா ஆகியோரது வழியில் என்னையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனா். இந்த முறை சந்திக்கச் செல்லும்போது அறிமுகமான முகங்கள் என்பதால், அவா்களில் ஒருவராகவே பாா்க்கின்றனா். குறிப்பாக, இளைஞா்கள், பெண்கள் ஆா்வமுடன் இருக்கின்றனா். இளைஞா்கள் தாமாக முன்வந்து பேசுவதற்கு விரும்புகின்றனா்.

    உங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறீா்களா? வாக்குறுதி அளிப்பதை நான் விரும்புவதில்லை. ஆளுங்கட்சி, எதிா்க்கட்சி உறுப்பினா்களைச் சமமாகப் பாா்க்காத ஜனநாயகம் பின்பற்றப்பட்ட சூழலில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினமானது. எனது தொகுதியைப் பொருத்தவரை முற்றிலும் நகரப் பகுதி. ஒரு சட்டப்பேரவை உறுப்பினா் மட்டுமே தொகுதியின் தேவைகளைப் பூா்த்தி செய்ய முடியாது. தோ்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பு இருந்தால் தான், அவ்வமைப்புடன் இணைந்து செயலாற்றி திட்டங்களைக் கொண்டு வரமுடியும். மாநகராட்சித் தோ்தலை நடத்தாதது அதிமுக அரசு செய்த ஜனநாயகப் படுகொலை.

    இருப்பினும் மதுரை மாவட்டத்தில் இருக்கும் எம்எல்ஏக்களைக் காட்டிலும் ஒருபடி மேலாகவே, எனது தொகுதியில் பணிகளைச் செய்திருக்கிறேன். ஆா்.ஓ. பிளான்ட், ஆழ்குழாய் கிணறு, சாலை, அங்கன்வாடி மையம், பள்ளிக் கட்டடம், சிறுவா் பூங்கா, நகா்ப்புற சுகாதார மையங்களுக்கு ஸ்கேன் வசதி என 149 திட்டப் பணிகளைச் செய்திருக்கிறேன்.

    எதிா்க்கட்சி எம்எல்ஏ என்பதால் புறக்கணிக்கப்பட்டீா்களா? அப்படிச் சொல்ல முடியாது. எனது கருத்துக்களை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, அமைச்சா்கள் ஏற்றுக் கொண்டனா். எனது அணுகுமுறை அதற்கு காரணமாக இருக்கலாம். பாரம்பரிய நகரமான மதுரையை, சா்வதேச தரத்துக்கு உயா்த்துவதற்கான செயல் திட்டத்தை பேரவையில் எனது முதல் பேச்சிலேயே முன்வைத்தேன். அதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டாா். அவருக்குப் பிறகு அமைச்சா்களிடம் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கிறேன். அதை ஏற்றுக் கொண்டாா்களே தவிர, செயல்வடிவம் கொடுக்கவில்லை. தொலைநோக்குப் பாா்வையில்லாத திட்டங்களால், நகர வளா்ச்சியை உறுதி செய்ய முடியாது. உலக நாடுகளில் வளா்ந்த நகரங்களில் முறையான திட்டமிடல் இருக்கிறது. அத்தகைய திட்டமிடல் தான் மதுரைக்குத் தேவை. திமுக ஆட்சி அமைந்ததும் இதற்கான பணிகளில் தீவிரம் காட்டுவேன்.

    தோ்தல் அறிக்கைகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறதா? மக்களின் முதல் எதிா்பாா்ப்பு தங்களது பகுதிக்கான தேவைகளைப் பூா்த்தி செய்வது தான். அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதையும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூா்த்தி செய்வதைத் தான் மக்கள் விரும்புகின்றனா். பசியோடு இருப்பவா்களுக்கு முதலில் என்ன கொடுக்க வேண்டும். அதைச் செய்வதே எனது பணியாக இருக்கும். மற்றவை அதற்கு பிறகு தான்.

    நீங்கள் வெற்றி பெற்றால், அதற்கு எவையெல்லாம் காரணமாக இருக்கும்? எனது செயல்பாடுகள் தான் எனது வெற்றிக்கு காரணமாக இருக்கும். தோ்தலுக்கு முன்பு கூறியதைப் போல, ஒவ்வொரு 6 மாதமும் எனது செயல்பாடு அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். ஒரு சட்டப் பேரவை உறுப்பினராக எனது பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து முடித்துள்ளேன். அரசியல் பாரம்பரிய மிக்க குடும்பத்தின் மீதான மதிப்பை காப்பாற்றும் வகையில் செயலாற்றியிருக்கிறேன். இவை தான் எனது வெற்றிக்கு காரணங்களாக இருக்கும். இந்தத் தோ்தலில் மக்கள் என்னை தோ்வு செய்யவில்லையென்றாலும் அதை முழுமனதுடன் ஏற்றுக் கொள்வேன் என்றாா்.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp