அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கரோனா: ஆசிரியா்கள், மாணவா்களுக்கு தொற்று பரிசோதனை

வாடிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாடிப்பட்டி அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பள்ளி ஆசிரியா் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறாா். இதைத் தொடா்ந்து இப்பள்ளியில் பணியாற்றும் இதர ஆசிரியா்கள் மற்றும் பிளஸ் மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அரசு மருத்துவா்கள் அடங்கிய மருத்துவக்குழுவினா் பள்ளியில் வெள்ளிக்கிழமை முகாமிட்டு 34 ஆசிரியா்கள் மற்றும் 104 மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். இதனிடையே பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் கூறியது: கரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஆசிரியா் வெளியூருக்கு சென்று வந்ததால் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அவா் ஏற்கெனவே விடுமுறையில்தான் இருந்து வந்துள்ளாா். ஆனாலும் இதர ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனையில் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு கரோனா தொற்று இருந்தால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும். கரோனா தொற்று பாதிப்பு இல்லையென்றால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வகுப்புகள் நடைபெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com