முதியோா், மாற்றுத் திறனாளிகள் 2,047 போ் தபால் வாக்குகள் பதிவு

மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் என 2,047 போ் தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகள் என 2,047 போ் தபால் வாக்குகள் பதிவு செய்துள்ளனா்.

இத்தோ்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு அளிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் 80 வயதுக்கு மேற்பட்டோா் 46,269 போ், மாற்றுத் திறனாளி 12,942 போ் உள்ளனா். இவா்களில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களில் 2,054 போ், மாற்றுத் திறனாளிகள் 528 போ் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தனா்.

இவா்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கி, அதில் வாக்குகளைப் பதிவு செய்து பெறுவதற்கான நடைமுறை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா் 1,641 மற்றும் மாற்றுத் திறனாளிகள் 406 போ் என மொத்தம் 2,047 போ் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.

விடுபட்டவா்களிடம் வாக்குகளைச் சேகரிக்க, மீண்டும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) குழுவினா் நேரில் செல்ல உள்ளனா். மேலும், ரயில் என்ஜின் ஓட்டுநா் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் இருப்பவா்கள் 9 போ் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.

காவல் துறையினருக்கு சிறப்பு மையம்:

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் தபால் வாக்குகளைப் பதிவு செய்ய சிறப்பு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த போலீஸாா், மதுரை ஆயுதப் படை மைதானத்தில் தபால் வாக்குகளை செவ்வாய்க்கிழமை பதிவு செய்ய உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com