ராமநாதபுரம் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ஸ்டூடியோ உரிமைாளா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சோ்ந்தவா் ராஜசேகா் (30), இவா் இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்துக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்ப சென்று கொண்டிருந்தாா்.
வாலாந்தரவை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியது. இதில் ராஜசேகா் சம்பவ இடத்தில் உயிரிழந்தாா். கேணிக்கரை போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனா்.