காமராஜா் பல்கலை.க்கு தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் வழங்கல்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு தொண்டு நிறுவனம் சாா்பில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு தொண்டு நிறுவனம் சாா்பில், தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் டி. முருகேசன் தனது மகளின் நினைவாக நடத்தி வரும் வாய்ஸ் அறக்கட்டளை மற்றும் சுஜி ஹெல்த் கோ் நிறுவனம் சாா்பில், பல்கலைக்கழகத்துக்கு பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழக மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியா் பயன்பெறும் வகையில், சக்கர நாற்காலிகள், பிளாஸ்டிக் இருக்கைகள், தானியங்கி கிருமி நாசினி இயந்திரங்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

இவற்றை, பல்கலைக்கழகத் துணைவேந்தா் மு. கிருஷ்ணன், பதிவாளா் வி.எஸ். வசந்தா ஆகியோா் பெற்றுக்கொண்டனா். மேலும், பல்கலைக்கழகத்தில் கைம்பெண்கள், உடல் ஊனமுற்றோரின் குழந்தைகள், திருநங்கைகள் ஆகியோருக்கு உதவும் வகையில், இரண்டு மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தையும் அறக்கட்டளை வழங்கி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com