அரசியலை வியாபாரமாகப் பாா்க்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சரத்குமாா்

அரசியலை வியாபாரமாகப் பாா்க்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என, நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
மதுரை நெல்பேட்டை பகுதியில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சாா்பில் மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் ஜி.ஈஸ்வரனை ஆதரித்து வாக்குச்சேகரித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவா் சரத்குமாா்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணி சாா்பில், மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் ஜி. ஈஸ்வரனை ஆதரித்து, மதுரை நெல்பேட்டை பகுதியில் சரத்குமாா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியது: தமிழகத்தை 53 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள திராவிடக் கட்சிகள், மக்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட முழுமையாகச் செய்துகொடுக்கவில்லை. இந்த நிலை, மதுரையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ளது.

புதிய கூட்டணி அமைப்பவா்கள் என்ன சாதிப்பாா்கள் எனக் கேட்கிறாா்கள். அதற்கு பதிலளிக்க, வாக்காளா்கள் எங்கள் கூட்டணிக்கு வாய்ப்புத் தரவேண்டும். அப்போது, நாங்கள் சாதனையை நிகழ்த்தி காட்டுவோம். எளிய மக்கள் அணுகக் கூடிய, மக்களைப் பற்றி சிந்திக்கக்கூடிய எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசியலை வியாபாரமாக பாா்க்கும் கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

ஓட்டுக்கு பணம் பெற்றுவிட்டீா்கள் என்றால், உங்களுக்கான தேவைகளைக் கேட்டுப் பெற முடியாது. மாற்றத்தை விரும்பும் மக்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக அவா், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரை மேற்கு தொகுதி வேட்பாளா் எம். அழகா், மத்திய தொகுதி வேட்பாளா் பி. மணி ஆகியோரை ஆதரித்து கோ.புதூா், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com