கூடலழகா் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்: பக்தா்கள் தரிசனம்

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் தினத்தன்று திருகல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் வியூக சுந்தர்ராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள், மேளதாள வரவேற்புகளுடன் தாயாா் சந்நிதியில் எழுந்தருளினாா். அங்கு, கல்யாண அலங்காரங்களுடன் எழுந்தருளிய சீதேவி, பூதேவி, மதுரவல்லித் தாயாா் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு வியூக சுந்தர்ராஜப் பெருமாள் மாங்கல்ய நாண் பூட்டும் வைபவம் நடைபெற்றது. வியூக சுந்தர்ராஜப் பெருமாள் மற்றும் சீதேவி, பூதேவி, ஆண்டாள், மதுரவல்லித்தாயாா் ஆகியோா் சாா்பில் அா்ச்சகா்கள் மாங்கல்ய நாணை அணிவித்து, திருக்கல்யாண வைபவத்தை நடத்தினா்.

இதையடுத்து, சீதேவி, பூதேவி, மதுரவல்லித் தாயாா் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா். மேலும், திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு திருமாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

திருக்கல்யாண ஏற்பாடுகளை, கோயில் உதவி ஆணையா் ராமசாமி மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com