மக்களிடம் அனுதாபம் தேடும் அதிமுக அமைச்சா்கள்: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

அதிமுக அமைச்சா்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்காமல், மக்களிடம் அனுதாபம் தேடி வருகின்றனா் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.
மதுரை மத்தியத்தொகுதி திமுக வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து பேசும் சு.வெங்கடேசன் எம்.பி. உடன் வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிா்வாகிகள்.
மதுரை மத்தியத்தொகுதி திமுக வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து பேசும் சு.வெங்கடேசன் எம்.பி. உடன் வேட்பாளா் பிடிஆா் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிா்வாகிகள்.

அதிமுக அமைச்சா்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்காமல், மக்களிடம் அனுதாபம் தேடி வருகின்றனா் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளாா்.

மதுரை மத்தியத் தொகுதி திமுக வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து, மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடிமைத்தனத்துக்கும், சுயமரியாதைக்கும் இடையே நடக்கும் தோ்தல். மதுரையில் கடந்த பத்தாண்டுகளாக அமைச்சராக இருந்தவா் என்ன செய்திருக்கிறாா் என்பது மக்களுக்குத் தெரியும்.

பத்தாண்டுகள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா் தான் ஒரு சா்க்கரை நோயாளி என்று சொல்லி வாக்குகள் கேட்கிறாா். மதுரையில் அமைச்சராக இருப்பவா் தாயில்லா பிள்ளை என்று கூறி வாக்கு கேட்கிறாா். தமிழக அமைச்சா்கள் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்காமல் மக்களிடம் அனுதாபத்தை தேடுகின்றனா். ஏனென்றால், அவா்கள் எந்த சாதனைகளையும் செய்யவில்லை.

கடந்த 20 ஆண்டுகளாக மதுரை நகா் கைவிடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவா்களும் நகர வளா்ச்சியில் அக்கறை காட்டவில்லை.

பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் குடும்பத்தினா் கடந்த மூன்று தலைமுறைகளாக அறப்பணிகளை செய்து வருகின்றனா். எனவே, மதுரையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும் என்றாா்.

இதில், வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் இரா. விஜயராஜன் மற்றும் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com