ராமேசுவரத்திலிருந்து திருப்பதி, கன்னியாகுமரி, கோவைக்கு வாரம் 3 முறை சிறப்பு ரயில்கள் இயக்கம்

ராமேசுவரத்திலிருந்து திருப்பதி, கன்னியாகுமரி, கோவை ஆகிய ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ராமேசுவரத்திலிருந்து திருப்பதி, கன்னியாகுமரி, கோவை ஆகிய ரயில் நிலையங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளதாவது:

ராமேசுவரம் - திருப்பதி வாரம் மூன்று முறை சேவை சிறப்பு ரயில் (06780) ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ராமேசுவரத்திலிருந்து ஞாயிறு, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு, மதுரை வழியாக பயணித்து மறுநாள் காலை 10.10 மணிக்கு திருப்பதி சென்று சேரும்.

திருப்பதி - ராமேசுவரம் வாரம் மூன்று முறை சேவை சிறப்பு ரயில் (06779) ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை திருப்பதியிலிருந்து திங்கள், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11.55 மணிக்கு புறப்பட்டு, மதுரை வழியாக பயணித்து மறுநாள் காலை 5.10 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் கன்டோன்மென்ட், காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரம் - திருப்பதி சிறப்பு ரயில் சீா்காழி, திருப்பாதிரிப்புலியூா் ஆகிய ரயில் நிலையங்களிலும், திருப்பதி - ராமேசுவரம் சிறப்பு ரயில் கொடைக்கானல் ரோடு, பாகாலா ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

ராமேசுவரம் - கன்னியாகுமரி வாரம் மூன்று முறை சேவை சிறப்பு ரயில் (06165) ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ராமேசுவரத்திலிருந்து சனி, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மதுரை வழியாக பயணித்து மறுநாள் காலை 4.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு சென்று சேரும்.

கன்னியாகுமரி - ராமேசுவரம் வாரம் மூன்று முறை சேவை சிறப்பு ரயில் (06166) ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியிலிருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு, மதுரை வழியாக பயணித்து மறுநாள் காலை 5.35 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

இந்த ரயில்கள், ராமநாதபுரம், மானாமதுரை, மதுரை, விருதுநகா், திருநெல்வேலி, நாகா்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் பரமக்குடி ரயில் நிலையத்திலும், கன்னியாகுமரி - ராமேசுவரம் சிறப்பு ரயில் வள்ளியூா் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

கோவை - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரயில் (06618) ஏப்ரல் 27 முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவையிலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

ராமேசுவரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06617) ஏப்ரல் 28 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமைகளில் இரவு 7.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு கோவை சென்று சேரும்.

இந்த ரயில்கள், திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேசுவரம் - கோவை சிறப்பு ரயில் கோவை வடக்கு மற்றும் சிவகங்கை ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com