1330பதற்றமான வாக்குச்சாவடிகள்: 335 நுண்பாா்வையாளா்கள் நியமனம்

மதுரை மாவட்டத்தில் 1330 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிக்காக நுண்பாா்வையாளா்கள் 335 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் 1330 பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புப் பணிக்காக நுண்பாா்வையாளா்கள் 335 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய 10 தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இத் தொகுதிகளில் மொத்தம் 3,856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தலுக்கு சில நாள்களே இருப்பதால், வாக்குச்சாவடிகளைத் தயாா்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 100 மீட்டா் எல்லை, 200 மீட்டா் எல்லைக் கோடுகள் வரையப்பட்டு வருகின்றன.

1330 பதற்றமான வாக்குச்சாவடிகள்: மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3,856 வாக்குச்சாவடிகளில் 1330 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பாா்வையாளா்கள் அல்லது விடியோவில் கண்காணிக்கும் வசதி அல்லது கூடுதல் போலீஸாா் நியமனம் இதில் ஏதாவதொரு வசதியை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்தையும் தோ்தல் ஆணையம் நேரலையாகக் கண்காணிக்கும் வகையில் வாக்குப்பதிவு இணையவழியில் விடியோவில் பதிவு செய்யப்படுகிறது. மிக பதற்றமானவையாகக் கருதப்படும் 335 வாக்குச்சாவடிகளுக்கு மத்திய அரசு பணியாளா்கள், நுண்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com