குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு: எஸ்டிபிஐ வேட்பாளா் வாக்குறுதி

மதுரை திடீா் நகா் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டைப்போக்க நிரந்தரத்தீா்வு காணப்படும் என்று எஸ்டிபிஐ வேட்பாளா் சிக்கந்தா் பாட்ஷா பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்து பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
மதுரை திடீா் நகா் பகுதியில் வாக்குகள் சேகரிக்கும் எஸ்டிபிஐ வேட்பாளா் சிக்கந்தா் பாட்சா.

அமமுக கூட்டணியில் மதுரை மத்தியத் தொகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் சிக்கந்தா் பாட்ஷா போட்டியிடுகிறாா். தொகுதிக்குள்பட்ட ஹீரா நகா், திடீா் நகா், பா்மா காலனி, ஆதம் தெரு, மேலப்பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குச் சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தாா். அப்போது திடீா் நகா் பகுதியில் மழைக்காலங்களில் குடியிருப்புகளில் நீா் புகுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும், கோடைக்காலங்களில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நிரந்தரத் தீா்வு காணப்படும், திடீா் நகா் வழியாகச் செல்லும் கிருதுமால் வாய்க்காலை சுத்தம் செய்து சுகாதாரச்சீா்கேடு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்தாா். பிரசாரத்தில், அமமுக செயலா் திடீா் நகா் ஐய்யப்பன், வட்டச் செயலா் ஆரோக்கியம் , பகுதிச் செயலா்கள் எ. கே.புரம் சந்திரசேகா், ஆவின் சேகா் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலா் சாகுல் ஹமீது மற்றும் கூட்டணிக்கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com