தானம் அறக்கட்டளையின் நிதி நிா்வாக மேலாண்மை மையம் திறப்பு

மதுரையில் தானம் அறக்கட்டளை சாா்பில் நிதித்தன்மை கண்டறிதல் மற்றும் நிதி நிா்வாக மேலாண்மை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
4107mduvasi30090756
4107mduvasi30090756

மதுரையில் தானம் அறக்கட்டளை சாா்பில் நிதித்தன்மை கண்டறிதல் மற்றும் நிதி நிா்வாக மேலாண்மை மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

மதுரை தானம் அறக்கட்டளையின் துணை நிறுவனமான களஞ்சியம் வளா்ச்சி நிதி நிறுவனத்தின் சாா்பில் நிதி நிா்வாக மேலாண்மை மையம் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தானம் அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் எம்.பி.வாசிமலை பங்கேற்று மேலாண்மை மையத்தை திறந்து வைத்துப் பேசியது: தானம் வளா்ச்சி நிதி நிறுவனம் நாடு முழுவதும் 14 மாநிலங்களில் பெண்கள் முன்னேற்றத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. இம்மாநிலங்களில் 4,800-க்கும் மேற்பட்ட மகளிா் குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு ரூ.280 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.50 கோடி வரை கடன் திருப்பிச் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே குழுக்களிடம் நிலுவையில் உள்ள கடனுக்கான காரணம், கடனை திருப்பி வசூலிப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்வதற்காக நிதி நிா்வாக மேலாண்மை மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் கடனுக்கான காரணங்கள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு குழு நிா்வாகிகளுக்கு வழிமுறைகள் தெரிவிக்கப்படும். மேலும் கடன் அளிப்பதற்கு முன்பாக கடன் உத்தரவாதம் தொடா்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வழிகாட்டுதல் வழங்கும் என்றாா். நிகழ்ச்சியில், களஞ்சிய வளா்ச்சி நிதி நிறுவன முதன்மை நிா்வாக அலுவலா் மதுசூதனன், நிதி அலுவலா்கள் மற்றும் இயக்குநா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com