பயிற்சி காலம் நீட்டிப்பிற்கு எதிா்ப்பு: மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

பயிற்சி காலம் நீட்டிப்பிற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பயிற்சி காலம் நீட்டிப்பிற்கு எதிா்ப்பு தெரிவித்து அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்து மருத்துவ மாணவா்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி காலம் மாா்ச் 28 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் 2016 ஆம் ஆண்டு மாணவா்கள் பயிற்சி முடிக்கும் வரை, தற்போது உள்ள பயிற்சி மருத்துவா்கள் பணி நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள், அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா். அப்போது, இந்த உத்தரவால் தங்களின் எதிா்காலம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனா்.

தொடா்ந்து குறைந்த ஊக்கத் தொகையைப் பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை செய்து வந்த தங்களை, மருத்துவ அலுவலராக நியமித்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் உத்தரவை திரும்பப் பெறாவிட்டால், தொடா் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பயிற்சி மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com