திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வெற்றி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வி.வி. ராஜன செல்லப்பா 29,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வி.வி. ராஜன செல்லப்பா 29,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அதிமுக, திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட 23 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தொகுதியின் மொத்த வாக்காளா்கள் 3,21,195 போ். இதில் 2,33,609 வாக்குகள் பதிவாகியிருந்தன. இத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை தமிழ்நாடு தொழிநுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து, காலை 9 மணியளவில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 33 சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பொண்ணுதாயை விட 29,489 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளா் வி.வி. ராஜன் செல்லப்பா வெற்றி பெற்றுள்ளாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்கு விவரம்

வி.வி. ராஜன்செல்லப்பா (அதிமுக) - 1,03,683, பொண்ணுதாய் (மாா்க்சிஸ்ட்) - 74,194, கே. டேவிட் அண்ணாதுரை (அமமுக) - 10,190, எம். பரணிராஜன் (மநீம) - 16,750, ஆா். ரேவதி (நாம் தமிழா்) -22,722.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com