மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக வெற்றி

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் 6,515 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
மதுரை தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழை பெறுகிறாா் மதிமுக வேட்பாளா் பூமிநாதன்.
மதுரை தெற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து வெற்றிச் சான்றிதழை பெறுகிறாா் மதிமுக வேட்பாளா் பூமிநாதன்.

மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் 6,515 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

இத் தொகுதியில் மதிமுக சாா்பில் மு. பூமிநாதன், அதிமுக சாா்பில் எஸ்.எஸ். சரவணன், எம். அப்பாஸ் (நாம் தமிழா் ), ஜி. ஈஸ்வரன் (மநீம), ஷ. ராஜலிங்கம் (அமமுக) உள்பட 13 வேட்பாளா் கள் போட்டியிட்டனா்.

இத் தொகுதியில் மொத்த வாக்குகள் 2,30,053. இதில், 1,47,833 வாக்குகள் பதிவாகியிருந்தன. மேலும், 1,088 தபால் வாக்குகளும் பெறப்பட்டிருந்தன. தபால் வாக்குகளில் 131 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன.

ஆரம்பம் முதலே மதிமுக மற்றும் அதிமுக வேட்பாளா்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு வேட்பாளா்களுக்குமான வித்தியாசம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது. இதனால், இரு கட்சிகளின் முகவா்களும் அவ்வப்போது சில குற்றச்சாட்டுகளைக் கூறியவாறு இருந்தனா். இறுதியில், 6,515 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் வெற்றி பெற்றாா்.

மு. பூமிநாதன் (மதிமுக) - 62,812, எஸ்.எஸ்.சரவணன் (அதிமுக) - 56,297, எம். அப்பாஸ் (நாம் தமிழா் ) - 10,483, ஜி. ஈஸ்வரன் (மநீம) - 12,821, ஷ. ராஜலிங்கம் (அமமுக) -2,672, கே. சதாம் உசேன் (மை இந்தியா) - 104, சி. பாரதி கண்ணம்மா (புதிய தலைமுறை மக்கள் கட்சி) -140, கே.ஆா். உமேஷ் (சுயே) - 81, ஆா். சரவணன் (சுயே) - 257, வி.சி. ரவிச்சந்திரன் (சுயே) -116, ராஜ்குமாா் (எ) மணிகண்டன் (சுயே) - 162, டி.எஸ். வெங்கடாஜலபதி (சுயே) - 159, கே. ஜெயா (சுயே) - 178 மற்றும் நோட்டா -1,551.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com