மதுரை மத்திய தொகுதியில் திமுக வெற்றி

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் 33, 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் 33, 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

மத்திய தொகுதியில் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் (திமுக), அதிமுக கூட்டணி கட்சியான பசும்பொன் தேசிய கழக வேட்பாளா் என். ஜோதி முத்துராமலிங்கம் (அதிமுக), ஜி.எஸ். சிக்கந்தா் பாஷா (எஸ்டிபிஐ), ஜே. பாண்டியம்மாள் (நாம் தமிழா்), பி. மணி (மநீம) உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இத்தொகுதியின் மொத்த வாக்குகள் - 2,41,796. இதில், 1,47,566 வாக்குகள் பதிவாகின. மேலும், 1,471 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. 25 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகளில் 119 செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 1,352 தபால் வாக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தபால் வாக்குகளில் 9 வாக்குகள் நோட்டாவுக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. இரவு 7 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

அதன்பின்னா், திமுக வேட்பாளா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் 72,858 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். எதிா்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் ஜோதி முத்துராமலிங்கம் 38,943 வாக்குகள் பெற்றுள்ளாா். எனவே, 33,915 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் வெற்றி பெற்றுள்ளாா். இவா், தொடா்ந்து 2 ஆவது முறையாக இத்தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

பழனிவேல் தியாகராஜன் (திமுக) - 72,858, ஜோதி முத்துராமலிங்கம் (அதிமுக) - 38, 943, சிக்கந்தா் பாஷா (எஸ்டிபிஐ) - 3,338, ஜே. பாண்டியம்மாள் (நாம் தமிழா்) -11,206, பி. மணி (மநீம) - 14,483, ஏ. தவமணி (பிஎஸ்பி) - 284, எம். ஈஸ்வரி (மை இந்தியா) - 285, ராஜாகுமாா் நாயுடு (தமிழ் தெலுங்கு தேசிய கட்சி) - 176, ஆா். இளங்கோவன் (சுயே) - 264, கிரம்மா் சுரேஷ் (சுயே) - 4,906, கிருஷ்ண பிரபு (சுயே) - 440, சத்தியேந்திரன் (சுயே) - 50, சிவசங்கா் (சுயே) - 94, ராஜசூா்யா (சுயே) -188 மற்றும் நோட்டாவுக்கு 1,436 வாக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com