மதுரை மாவட்டத்தில் திமுக, அதிமுக தலா 5 இடங்களில் வெற்றி

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தலா 5 இடங்களை அதிமுகவும், திமுகவும் கைப்பற்றியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தலா 5 இடங்களை அதிமுகவும், திமுகவும் கைப்பற்றியுள்ளன.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் சோழவந்தான் (தனி) ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக நேரடியாகவும், மதுரை மத்திய தொகுதியில் பசும்பொன் தேசிய கழகம் அதிமுக சின்னத்திலும் போட்டியிட்டது. மதுரை வடக்கு தொகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜக போட்டியிட்டது.

அதேபோல், மதுரை கிழக்கு, சோழவந்தான் (தனி), மதுரை வடக்கு, மதுரை மையம், மதுரை மேற்கு, திருமங்கலம் ஆகிய 6 தொகுதிகளில் திமுக நேரடியாகப் போட்டியிட்டது. மதுரை தெற்கு தொகுதியில் மதிமுகவும், உசிலம்பட்டியில் பாா்வா்டு பிளாக் கட்சியும் திமுக சின்னத்தில் போட்டியிட்டன. மேலூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், திருப்பரங்குன்றத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன.

இதில், அதிமுக வேட்பாளா்களான மேலூரில் பெரியபுள்ளான், மதுரை மேற்கில் செல்லூா் கே. ராஜூ, திருப்பரங்குன்றத்தில் வி.வி. ராஜன் செல்லப்பா, திருமங்கலத்தில் ஆா்.பி. உதயகுமாா், உசிலம்பட்டியில் அய்யப்பன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

இதேபோல், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளா்களான மதுரை மத்தியில் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், மதுரை கிழக்கில் பி. மூா்த்தி, மதுரை வடக்கில் கோ. தளபதி, மதுரை தெற்கில் மு. பூமிநாதன் (மதிமுக) மற்றும் சோழவந்தானில் (தனி) வெங்கடேசன் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com