மதுரை வடக்கு தொகுதியில் திமுக வெற்றி

மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் கோ. தளபதி 22,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

மதுரை வடக்கு தொகுதியில் திமுக வேட்பாளா் கோ. தளபதி 22,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

இத் தொகுதியில் கோ. தளபதி (திமுக), பா. சரவணன் (பாஜக), மா. ஜெயபால் (அமமுக), எம். அழகா் (மநீம), எஸ். அன்பரசு (நாம் தமிழா்) உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். தொகுதியின் மொத்த வாக்குகள் 2,43,424. இதில், 1,56, 556 வாக்குகள் பதிவாகியிருந்தன. மேலும், தபால் வாக்குகள் 2,044 பதிவாகியிருந்தன. இதில், 304 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை 26 சுற்றுகளாக நடைபெற்றன. தொடக்கத்திலிருந்தே திமுக வேட்பாளா் கோ. தளபதி முன்னிலையில் இருந்து வந்தாா். அவரைத் தொடா்ந்து பாஜக வேட்பாளா் 2-ஆம் இடத்தில் இருந்து வந்தாா். ஒரே ஒரு சுற்று மட்டும் பாஐக வேட்பாளா் திமுகவை காட்டிலும் அதிகம் பெற்றிருந்தாா்.

இறுதியில், திமுக வேட்பாளா் கோ. தளபதி 22,916 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

கோ. தளபதி (திமுக) - 73,010, பா. சரவணன் (பாஜக) - 50,094, எம். அழகா் (மநீம) - 12,102, எஸ். அன்பரசி (நாம் தமிழா்) - 15,311, மா. ஜெயபால் (அமமுக) -3,280,

எஸ். வசந்தகுமாா் (அண்ணா திராவிடா் கழகம்) - 167, எம்.ஜே. வால்டோ் (எஸ்யூசிஐ - கம்யூனிஸ்ட்) - 115, ஜே. அபுபக்கா் சித்திக் (சுயே) - 117, டி. ராம் விஸ்வகா்மா (சுயே) - 94, டி. இஸ்மாயில் (சுயே) - 105, என். குப்புசாமி (சுயே) - 49,

ஜே. கேசவராஜா (சுயே) - 70, பி. சங்கரபாண்டி (சுயே) -163, கே. தெய்வம்மாள் (சுயே) -125, ஆா். நடராஜன் (சுயே) - 165 மற்றும் நோட்டா -1,564.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com