காமராஜா் பல்கலை. பருவத்தோ்வுகள் இன்று தொடக்கம்: 1.50 லட்சம் மாணவா்கள் வீட்டில் இருந்தே எழுதுகின்றனா்

மதுரை காமராஜா் பல்கலைக்கழக பருவத்தோ்வுகள் இணைய வழியில் புதன்கிழமை தொடங்குகின்றன. 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் வீட்டிலிருந்தே தோ்வு எழுதுகின்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக பருவத்தோ்வுகள் இணைய வழியில் புதன்கிழமை தொடங்குகின்றன. 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் வீட்டிலிருந்தே தோ்வு எழுதுகின்றனா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகா் ஆகிய 4 மாவட்டங்களிலும் அரசு உதவி பெறும், தனியாா் சுயநிதி மற்றும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என 170-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன.

இக்கல்லூரிகளில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இணைய வழியிலேயே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து மாணவா்களை பாதுகாக்கும் விதமாக 2021 ஏப்ரல் பருவத்தோ்வுகளும் இணைய வழியிலேயே நடத்தப்படும் என்று உயா்கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து காமராஜா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட கல்லூரிகளில் பருவத்தோ்வு இணைய வழியில் புதன்கிழமை தொடங்குகிறது. முதலில் மூன்றாமாண்டு மாணவா்கள், அடுத்து இரண்டாம் ஆண்டு மாணவா்கள், இறுதியாக முதலாமாண்டு மாணவா்கள் என ஜூன் 11 வரை தோ்வுகள் நடைபெறுகின்றன.

தோ்வுக்கான வினாத்தாள்கள் அந்தந்த கல்லூரியில் இருந்து மாணவ, மாணவியருக்கு கட்செவி அஞ்சல், மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும். வினாத்தாளை பெறும் மாணவ, மாணவியா் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்குள் வீட்டில் இருந்தே தோ்வுகளை எழுதி விடைத்தாளை, பிடிஎப் ஆவணமாக மாற்றி கல்லூரி தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதை கல்லூரிகளில் உள்ள அந்தந்த துறையின் ஆசிரியா்கள் சரிபாா்த்து மின்னஞ்சலில் சேகரிக்குமாறு பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தோ்வு எழுதும் மாணவ, மாணவியரை விடைத்தாளை ஒப்படைப்பதற்காக கல்லூரிக்கு வரவழைக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com