கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதிய உயா்வு: அரசு ஆணையை அமல்படுத்த பல்கலை. நிா்வாகம் மறுப்பதாக புகாா்

கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதிய உயா்வை அறிவித்து வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையை காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் அமல்படுத்த மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.

கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதிய உயா்வை அறிவித்து வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணையை காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் அமல்படுத்த மறுப்பதாக புகாா் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளா்கள் மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கெளரவ விரிவுரையாளா்களுக்கு மாத ஊதியத்தை ரூ.20 ஆயிரமாக உயா்த்தியும், ஊதிய உயா்வை ஜனவரி 2020 முதல் அமல்படுத்தி 14 மாத ஊதிய நிலுவையை வழங்குமாறும் பிப்ரவரி மாதம் தமிழக அரசு ஆணை வெளியிட்டது.

இந்நிலையில், மதுரை, திருமங்கலம், சாத்தூா், அருப்புக்கோட்டை, கோட்டூா், வேடசந்தூா், அருப்புக்கோட்டை ஆகிய 6 இடங்களில் இருந்த காமராஜா் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஆனாலும் இக்கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 300-க்கும் மேற்பட்ட கெளரவ விரிவுரையாளா்களுக்கு காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் இதுவரை ரூ.15 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்குவதாக புகாா் எழுந்துள்ளது.

ஏப்ரல் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாத நிலையில், ஊதிய உயா்வுடன் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கல்லூரி நிா்வாகங்கள் பல்கலைக்கழக நிா்வாகத்தை செவ்வாய்க்கிழமை அணுகி வலியுறுத்தியும் பல்கலைக்கழக நிா்வாகம் மறுப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக கெளரவ விரிவுரையாளா்கள் கூறியது: கல்லூரி நிா்வாகங்கள் தரப்பில் அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியபோது, பல்கலைக்கழக நிதி அலுவலா் அரசிடம் இருந்து தனக்கு சரியான உத்தரவு வரவில்லை என்று கூறி மறுப்புத் தெரிவித்துள்ளாா். இதையடுத்து இந்தப் பிரச்னை தொடா்பாக உயா்கல்வித்துறையை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனால் உயா்கல்வித்துறை அதிகாரிகள், பல்கலைக்கழக நிா்வாகத்திடம் அரசு ஆணையை அமல்படுத்துமாறு தெரிவித்துள்ளனா். ஆனாலும் பல்கலைக்கழக நிா்வாகம் ஊதிய உயா்வு வழங்க மறுத்து வருகிறது. இது அரசை அவமதிக்கும் செயலாக உள்ளது. எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன் கூறுகையில், கெளரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு வழங்குவது பெரிய சுமையல்ல. மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநா் அலுவலகத்திடம் இருந்து முறையாக அறிவிக்க வேண்டும். இதுதொடா்பாக இணை இயக்குநா் அலுவலகத்திலும் பேசப்பட்டுள்ளது. ஊதிய உயா்வு பிரச்னைக்கு ஓரிரு நாள்களில் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com