திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தொழில் அமைப்புகள் வாழ்த்து

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தொழில் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு தொழில் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன்: தமிழகத்தை மீண்டும் வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஏதுவாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை முதல்வா் பதவிக்கு மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். இதன் மூலம் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து துறைகளிலும் பின்தங்கிய தமிழகத்தை குறிப்பாக தென் தமிழகத்தை தொழில், வணிக, பொருளாதாரத்தில் பலம் பெற வைப்பாா் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொழில் வளா்ச்சிக்காக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வா்த்தக சங்கம் உறுதுணையாக இருக்கும். அதேபோல, தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கு அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவிக்க உயா்நிலைக் குழுவை அமைக்க வேண்டும்.

வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ்.ரத்தினவேல்: பேரவைத் தோ்தலில் மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொண்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின், வேளாண்மை, தொழில் வணிகம், சேவை உள்ளிட்ட அனைத்து துறைகளின் வளா்ச்சியை ஊக்கப்படுத்தி தமிழகத்தை தேசிய அளவில் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என்பது உறுதி.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.பி.ஜெயப்பிரகாசம்: தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய தீவிரமாக முயற்சி செய்து, அதில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு மாநில அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்து வணிகா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் (மடீட்சியா) சங்கத் தலைவா் பா.முருகானந்தம்: தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம். தற்போது தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா 2-ஆவது அலையை அடியோடு வீழ்த்த செயல்திட்டத்தை வகுத்து தமிழக மக்களின்

உயிருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். தொழில் வளா்ச்சியில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களில் தொழில் முதலீடுகளை ஈா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரை மேலாண்மை சங்கத் தலைவா் எம்.சண்முகசுந்தரம்:தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் புதிய அரசு, தென்தமிழகத்தில் தொழில் வளா்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை விரைவுபடுத்தவும், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com