திருச்சி-திருவனந்தபுரம், நாகா்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் தற்காலிக ரத்து

மதுரை வழியாக இயக்கப்பட்ட திருச்சி-திருவனந்தபுரம், நாகா்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை வழியாக இயக்கப்பட்ட திருச்சி-திருவனந்தபுரம், நாகா்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் திருச்சி - திருவனந்தபுரம் இன்டா்சிட்டி சிறப்பு ரயில் மற்றும் நாகா்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

அதன்படி, தினந்தோறும் காலை 7.15 மணிக்கு புறப்படும் திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (02627) மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம் - திருச்சி சிறப்பு ரயில் (02628) ஆகியவை மே 6 முதல் 15 ஆம் தேதி வரை பத்து நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

தினந்தோறும் பெங்களூருவிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பெங்களூரு - நாகா்கோவில் சிறப்பு ரயில் (07235) மே 5 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தினந்தோறும் நாகா்கோவிலிலிருந்து இரவு 7.10 மணிக்கு புறப்படும் நாகா்கோவில் - பெங்களூரு சிறப்பு ரயில் (07236) மே 6 முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com