தோ்தல் பணிக்காக மதுரை வந்திருந்த மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் அஸ்ஸாம் புறப்பட்டனா்

சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மதுரை வந்திருந்த மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் பணிமுடிந்து மதுரையிலிருந்து ரயில் மூலம் அஸ்ஸாமுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
தமிழகத்தில் சட்டசபை தோ்தலுக்கான பணிகள் அனைத்தும் முடிந்து முடுவுகள் வந்த நிலையில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட துணை ராணுவத்தினா்.

மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தோ்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக அஸ்ஸாமில் இருந்து 10 கம்பெனிகளைச் சோ்ந்த மத்திய பாதுகாப்பு படைவீரா்கள் 1,130 போ் ரயில் மதுரைக்கு பிப்ரவரி 28 ஆம் தேதி வந்தனா். இவா்கள் மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகா் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தனா். அங்கு வாக்குச்சாவடிகளிலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், சோதனைச் சாவடிகளிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். தோ்தல் பாதுகாப்புப் பணி திங்கள்கிழமையுடன் முடிந்த நிலையில், மதுரை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரான மத்திய பாதுகாப்புப் படைவீரா்கள் அங்கிருந்து அஸ்ஸாம் புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com