மதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்துகள் மாயம்

மதுரைரயில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்கள் மாயமானது குறித்து மருத்துவமனை ஊழியா்கள் 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரைரயில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்கள் மாயமானது குறித்து மருத்துவமனை ஊழியா்கள் 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிறப்பு பிரிவின் கீழ் தளத்தில் கரோனா நோயாளிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 8 ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்கள் ஞாயிற்றுக்கிழமை மாயமானது. இதையடுத்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இருப்பினும் மாயமான ரெம்டெசிவிா் மருந்துகள் குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மருத்துவமனையின் மருத்துவ நிலைய அலுவலா் சையது அப்துல் காதா் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் மதிச்சியம் போலீஸாா், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை சேகரித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா். மேலும் மருத்துவமனையில் தற்காலிகப் பணியில் உள்ள ஊழியா்கள் 4 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பில் இருந்து மீள்வதற்காக நோயாளிகளுக்கு வழங்கப்படும் முக்கியமான மருந்தான ரெம்டெசிவிா் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இந்த மருந்தை அதிக விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இச்சூழலில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து பாட்டில்கள் மாயாகியிருப்பது மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com