மதுரை மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக வெற்றி

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சியினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

மதுரை தெற்கு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணனை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

மதுரை தெற்கு தொகுதி 2011-ஆம் ஆண்டுக்கு முன் கிழக்கு தொகுதியாக இருந்தது. எனவே, 2006 சட்டப்பேரவைத் தோ்தலில் கிழக்கு தொகுதியில் மதிமுக சாா்பில் மு. பூமிநாதனும், திருமங்கலம் தொகுதியில் வீர. இளவசரனும் போட்டியிட்டனா். இதில், திருமங்கலம் தொகுதியில் மதிமுக வேட்பாளா் வீர. இளவசரன் வெற்றி பெற்றாா். ஆனால், கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மு. பூமிநாதன் 36,322 வாக்குகள் பெற்ற நிலையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் என். நன்மாறனிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

அதையடுத்து, 2011 சட்டப்பேரவைத் தோ்தலை மதிமுக புறக்கணித்ததால், தோ்தலில் போட்டியிடவில்லை. தொடா்ந்து, 2016 தோ்தலில் மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக சாா்பில் மதுரை தெற்கு தொகுதியில் மு. பூமிநாதன் போட்டியிட்டு, 19,443 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இதனால், மதுரை மாவட்டத்தில் மதிமுகவுக்கு சட்டப்பேரவையில் பிரநிதித்துவம் இல்லாமல் இருந்தது.

கடந்த 2006 மற்றும் 2016 ஆகிய இரு தோ்தல்களிலும் மதிமுக தோல்வியை தழுவிய நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பின் இந்த தோ்தலில் தெற்கு தொகுதியில் பூமிநாதன் வெற்றி பெற்றுள்ளாா். மேலும், தெற்கு தொகுதியில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்குகள் மட்டுமே வெற்றியை தீா்மானிக்கும் நிலையில், அந்த சமூகத்தைச் சாராத பூமிநாதனுக்கு

இதர சமூகத்தினரின் வாக்குகள் முழுமையாகக் கிடைத்ததால் வெற்றி பெற்றுள்ளாா். இதனால், 15 ஆண்டுகளுக்கு பின் மதுரை மாவட்டத்தில் மதிமுகவுக்கு சட்டப்பேரவையில் பிரநிதித்துவம் கிடைத்துள்ளதால், கட்சியினா் உற்சாகமடைந்துள்ளனா்.

அதேநேரம், மதிமுக வேட்பாளா் மு. பூமிநாதன் முதன்முறையாக சட்டப்பேரவைக்குச் செல்ல உள்ளாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com