விடிய விடிய நடைபெற்ற திருமங்கலம் தொகுதிவாக்கு எண்ணிக்கை: அதிமுக வெற்றி

திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று, திங்கள்கிழமை காலை 4.05 மணிக்கு முடிவு அறிவிக்கப்பட்டது.


மதுரை: திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று, திங்கள்கிழமை காலை 4.05 மணிக்கு முடிவு அறிவிக்கப்பட்டது.

திருமங்கலம் தொகுதியில் அதிமுக சாா்பில் ஆா்.பி. உதயகுமாா், திமுக சாா்பில் மு. மணிமாறன் உள்பட 24 போ் போட்டியிட்டனா். ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 30 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் 14 ஆவது சுற்று தொடங்கியபோது, செங்கப்படை வாக்குச் சாவடிக்குரிய வாக்குப் பெட்டியின் எண்ணும், அதிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் எண்ணும் வெவ்வேறாக இருந்தன.

இதற்கு, திமுக தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதையடுத்து, 3.30 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதனால், வாக்குகள் எண்ணப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திருமங்கலம் தவிர, மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், திருமங்கலம் தொகுதியில் 3 மணி நேரத்துக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதோடு, சுற்றுக்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால், விடிய விடிய வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து அதிகாலை 4.05 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், அதிமுக வேட்பாளா் ஆா்.பி. உதயகுமாா் 1,00,338 வாக்குகள் பெற்று, 14,087 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் மு. மணிமாறன் 86,251 வாக்குகள் பெற்றுள்ளாா்.

இத்தொகுதியில் 3,897 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், ஆா்.பி. உதயகுமாருக்கு 1,044 வாக்குகளும், மணிமாறனுக்கு 1,870 வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடந்த 2016 தோ்தலில் இதே தொகுதியில் 23,590 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆா்.பி. உதயகுமாா், இரண்டாவது முறையாக திருமங்கலம் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

ஆா்.பி. உதயகுமாா் (அதிமுக) - 1,00,338, மு. மணிமாறன் (திமுக) - 86,251,

கரு. ஆதிநாராயணன் (அமுமக) - 13,780, எம். ராம்குமாா் ( மநீம) 2,775,

மை. சாராள் (நாம் தமிழா்) - 11,593.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com