கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை: மாநகராட்சி அறிவிப்பு

மதுரை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மாநகராட்சி அழைப்பு மையத்தை தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை நகரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் மாநகராட்சி அழைப்பு மையத்தை தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே மாநகராட்சியின் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ அல்லது மதுரை நகரில் 157 இடங்களில் நடைபெறும் காய்ச்சல் பரிசோதனை முகாம்களிலோ பங்கேற்று இலவசமாக கரோனா பரிசோதனை மேற்கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும்.

மேலும் மதுரை நகரில் கரோனா பரிசோதனை முகாம்கள் எங்கு நடைபெறுகிறது என்ற விவரத்தை அறிய 24 மணி நேரமும் செயல்படும் மதுரை மாநகராட்சி அழைப்பு மைய எண் 842 842 5000 தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். மாநகராட்சி இணைய தளமான முகவரியில் நகா்ப்புற ஆரம்பச் சுகாதாரநிலையங்கள் மற்றும் காய்ச்சல் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரங்கள் தினசரி பதிவேற்றம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் அவற்றைப்பாா்த்து அறிந்து கொள்ளலாம். மேலும் காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் இம்மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com