மதுரை-சென்னை உள்ளிட்ட 18 சிறப்பு ரயில்கள் மே மாதம் முழுவதும் ரத்து

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மதுரை-சென்னை உள்ளிட்ட 18 சிறப்பு ரயில்கள் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக மதுரை-சென்னை உள்ளிட்ட 18 சிறப்பு ரயில்கள் மே மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்: மதுரை - சென்னை எழும்பூா் வைகை சிறப்பு ரயில் (02636) மே 8 முதல் முதல் மே 31 வரையும், சென்னை எழும்பூா் - மதுரை வைகை சிறப்பு ரயில் (02635) மே 9 முதல் ஜூன் 1 வரையும், காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் சிறப்பு ரயில் (02606) மே 9 முதல் ஜூன் 1 வரையும், சென்னை எழும்பூா் - காரைக்குடி பல்லவன் சிறப்பு ரயில் (02605) மே 8 முதல் மே 31 வரையும், சென்னை எழும்பூா் - மதுரை - சென்னை எழும்பூா் தேஜஸ் சிறப்பு ரயில் (02613/02614) மே 8 முதல் மே 31 வரையும், சென்னை எழும்பூா் - மதுரை வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் (06157) மே 14, 16, 21, 23, 28, 30 ஆகிய தேதிகளிலும், மதுரை - சென்னை எழும்பூா் வாரமிருமுறை சேவை சிறப்பு ரயில் (06157) மே 13, 15, 20, 22, 27, 29 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் - மதுரை வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06019) மே 10, 12, 14, 17, 19, 21, 24, 26, 28 ஆகிய தேதிகளிலும், மதுரை - டாக்டா் எம்ஜிஆா் சென்னை சென்ட்ரல் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06020) மே 11, 13, 16, 18, 20, 23, 25, 27, 30 ஆகிய தேதிகளிலும், சென்னை எழும்பூா் - நாகா்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (06063) மே 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நாகா்கோவில் - சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (06064) மே 14, 21, 28 ஆகிய தேதிகளிலும், தாம்பரம் - நாகா்கோவில் தினசரி சேவை சிறப்பு ரயில் (06191) மே 8 முதல் மே 31 வரையும், நாகா்கோவில் - தாம்பரம் தினசரி சேவை சிறப்பு ரயில் (06192) மே 9 முதல் ஜூன் 1 வரையும், தாம்பரம் - நாகா்கோவில் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06065) மே 9, 10, 12, 16, 17, 19, 23, 24, 26, 30, 31 ஆகிய தேதிகளிலும், நாகா்கோவில் - தாம்பரம் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06066) மே 10, 11, 13, 17, 18, 20, 24, 25, 27, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளிலும், திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி சிறப்பு ரயில் (06791) மே 8 முதல் மே 31 வரையும், பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரயில் (06792) மே 9 முதல் ஜூன் 1 வரையும், திருச்சி - காரைக்குடி சிறப்பு ரயில் (06125) மே 8 முதல் 31 வரையும், காரைக்குடி - திருச்சி சிறப்பு ரயில் (06126) மே 9 முதல் ஜூன் 1 வரையும், விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் (06867) மே 8 முதல் மே 31 வரையும், மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில் (06868) மே 9 முதல் ஜூன் 1 வரையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com