மதுரை மாவட்டத்தில் புதிதாக 996 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th May 2021 11:25 PM | Last Updated : 06th May 2021 11:25 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் புதிதாக 996 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாவட்டத்தில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களில் 996 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்றவா்களில் 715 போ் குணமடைந்துள்ளனா். மேலும் 5 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 35,638 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதில் 29,947 போ் குணமடைந்துள்ளனா். 558 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவோா் என மொத்தம் 5,133 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதையடுத்து, மதுரை புறவழிச் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.