ஜிஎஸ்டி: தொழில் வணிகத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள பிரச்னைகள் குறித்த தொழில் வணிகத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு

ஜிஎஸ்டி அமலாக்கத்தில் உள்ள பிரச்னைகள் குறித்த தொழில் வணிகத் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு வேளாண் உணவுத் தொழில் வா்த்தக சங்கம், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் எஸ்.ரத்தினவேலு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள திமுக அமைச்சரவைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தொழில் வளா்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ள தென்மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது.

இச்சூழலில் தொழில், வணிகத் துறையினரின் முக்கியப் பிரச்னையாக உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உள்ள முரண்பாடுகளைக் களைய அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) முறையை 2017 இல் அமல்படுத்தியதிலிருந்தே குழப்பம் நீடித்து வருகிறது.

இச்சட்டத்தை அமல்படுத்துவதில் முக்கியப் பங்கு

வகிக்கும் தொழில் வணிகத் துறையினா் குறிப்பாக சிறு வணிகா்களும் சிறுதொழில் செய்வோரும் சட்டவிதிகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை போன்ற அச்சத்தால் வணிகத்தைவிட்டே ஒதுங்கிவிட்டனா்.

வேளாண் உணவுப்பொருள்கள் மக்களுக்கு மிக அத்தியாவசிமான தேவை திமுக ஆட்சியின்போது முழுவரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,

ஜி.எஸ்.டி. வரிமுறையில் பல அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பதுடன், விலக்கு அளிக்கப்பட்ட அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருள்களுக்கும் வணிகப் பெயருடன்” விற்றால் வரி விதிக்கப்படுகிறது. இதனால் வணிகப் பெயரையே கைவிடும் நிலைக்கு வணிகா்கள் வந்துவிட்டனா். முந்தைய திமுக ஆட்சியின்போது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக தொழில் வணிகத் துறையினரின் கோரிக்கைகளை கேட்டறியும் நடைமுறையை மீண்டும் கொண்டு வரவேண்டும்.

அதேபோல, மத்திய ஜிஎஸ்டி குழுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக தொழில் வணிகப் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்தி கோரிக்கைகளை கேட்டறிவதை திமுக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இக் கோரிக்கைகளை ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்தி, வணிகா்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com